Posts

Showing posts from January 3, 2023
 ' மாநில கல்விக் கொள்கையே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும்' - அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டிற்கென மாநில அளவிலான கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 6 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் நிரந்தர பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்பதில் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கென மாநில அளவிலான கல்விக்கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதுவே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் என்று கூறிய அவர், முந்தைய அதிமுக ஆட்சியில் விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.
Image
  TET Paper 2: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேதி அறிவிப்பு! ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கான கணினி வழித் தேர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 2-க்கான கணினி வழித் தேர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) அறிவித்துள்ளது.  இதுகுறித்து டிஆர்பி தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது ஜனவரி மாதம் 31 முதல் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்-2ற்கு உரியத் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Te...
Image
  இல்லம் தேடி கல்வி திட்டம்...! தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம்...? இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் காலியிடங்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக 4 மாதத்திற்கு மட்டும் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் இடைவெளியை சரிசெய்வதற்காக தொடங்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டப் பணிகளை மேற்கொள்ளுவதற்காக ஒரு ஆசிரியர், மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளரும், ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளரும் செயல்பட்டு வருகின்றனர். எனவே பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காத வகையில், தேவைப்படும் பட்சத்தில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.  அதில், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்களை இக்கல்வியாண்டு முடி...
Image
  வரும் 24-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.! 40,000 காலியிடங்கள்.! முழு விவரம் உள்ளே.! தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, மாவட்ட நிர்வாகம்‌, மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம்‌ (மகளிர்‌ திட்டம்‌) இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌,  வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ 24.01.2023 அன்று நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய்‌ வித்யாலயா பெண்கள்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு,மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளில்‌ இருந்து 300-க்கும்‌ மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ 40,000ற்கும்‌ மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்‌.  மேலும்‌, இம்முகாமில்‌ 20,000ற்கும்‌ மேற்பட்ட வேலைநாடுநர்களும்‌ கலந்து கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 8.00 மணி முதல்‌ மாலை 4....