Posts

Showing posts from January 2, 2023
Image
  கவுரவ விரிவுரையாளர் பணிகளுக்கு ஜன.4ல் நேர்முக தேர்வு: அமைச்சர் பொன்முடி பேட்டி கவுரவ விரிவுரையாளர் பணிகளுக்கான நேர்முக தேர்வு ஜனவரி 4ம் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1,895 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன் அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் சொன்னதன் அடிப்படையில், இணை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுதான் நேர்முக தேர்வுக்கு வரவழைத்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். நேர்முக தேர்வுக்கு வரக்கூடிய விரிவுரையாளர்களிடம் அந்த துறை சார்ந்த நீண்ட அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கேள்விகளை கேட்பதற்கு நியமிக்கப்படுவார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் இந்த நேர்முக தேர்வு நடத்துவது ...
Image
  பொதுப்பிரிவில் 42 வயதை கடந்தவர்கள் இனி ஆசிரியர் பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாது! தமிழகத்தில் பொதுப் பிரிவில் 42 வயதை கடந்தவர்கள் இனி ஆசிரியர் பணி நேரடி நியமனங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதிமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆசிரியர் பணி நேரடி நியமனங்களில் 42 வயதை கடந்தவர்களுக்கு சிறப்பு நிகழ்வாக தமிழக அரசு வாய்ப்பு வழங்கி வந்தது 2022-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனங்கள் மிக முக்கியமான ஒரு வேலைவாய்ப்பாக இருந்து வருகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த சீனியாரிட்டி படி ஆசிரியர் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டும் இருக்கின்றன. பின்னர் தேர்வு மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை பல லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த ஆசிரியர் தேர்வு முறை மாற்றப்பட்டு பழையபடி சீனியாரிட்டி முறையிலேயே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்து வருகிறது. பொதுவாக அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் அன...
Image
  10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவக்கம்! நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன. பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன. இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஒரே கட்டமாக நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியான நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பிப்ரவரி மாதம் 15ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன.   இதற்கிடையே, செய்முறைத் தேர்வுகளை நடத்துவது குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இன்று ஜனவரி 2ம் தேதி முதல்14ம் தேதிக்குள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தி...
Image
  10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. தனித்தேர்வர்களுக்கு நாளையே கடைசி தேதி.. முக்கிய அறிவிப்பு.!!! 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து வராதவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதவும் விண்ணப்பிக்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்களுக்கு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று விண்ணப்ப பதிவு தொடங்கி நாளையோடு முடிவடைகிறது. நாளைக்குள் விண்ணப்பிக்க தவறினால் ஜனவரி 5 முதல் 7ஆம் தேதி வரை சேவை மையத்துக்கு சென்று தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.