எம்.ஃபில் படிப்பு செல்லாது; மாணவர்கள் சேரவேண்டாம் - யுஜிசி எச்சரிக்கை!
மணவர்கள் எம்.ஃபில் (M.Phil) படிப்புகளில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது.
எம்.ஃபில் படிப்புகளை நிறுத்தப்போவதாக 2022ம் ஆண்டிலேயே யுஜிசி தெரிவித்த நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்பித்தல் பணிக்கு தகுதியானது இல்லை என்பதால் 2022-23 ஆம் ஆண்டிலிருந்து எம்.ஃபில் படிப்பு நீக்கப்படுகிறது என்றும், இனிமேல் இந்த படிப்பில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட எம்.ஃபில் பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி தெரிவித்திருந்தது.
ஆனால் எம்.ஃபில் படிப்புக்கான அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தபோதிலும், சில பல்கலைக்கழகங்கள் அந்த படிப்புக்கு மாணவர்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியானது
யுஜிசி
இந்த நிலையில் தற்போது மிண்டும் யூஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எம்.ஃபில் படிப்புக்கு அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்றும், இந்த படிப்புக்கான அங்கீகாரம் ஏற்கெனவே நிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment