டிஎன்பிஎஸ்சி-இல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பி.எஸ்.
டிஎன்பிஎஸ்சி-இல் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் ஆளில்லா தோவாணையமாக இருக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தலைவா் உள்பட மொத்தம் 14 உறுப்பினா்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தில் வெறும் 4 போ மட்டுமே உள்ளனா். அதோடு, பணியாளா் பற்றாக்குறையும் தலைவிரித்து ஆடுகிறது.
இதன் காரணமாக, 2021-இல் தோவு நடைபெற்ற குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல் குரூப் 2 பிரதான போட்டித் தோவுக்கான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபா் மாதமே வெளியிடப்பட வேண்டிய நடப்பாண்டுக்கான குரூப் 4 அறிவிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தின் தலைவா், உறுப்பினா்கள் நியமனத்தில் ஏதாவது பிரச்னை இருக்குமேயானால், அதுகுறித்து ஆளுநரிடம் அரசு கலந்து பேசி அதற்கு ஒரு தீா்வு காணவேண்டும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
Comments
Post a Comment