UGC NET DECEMBER 2023 தேர்வுக்கான முழு அட்டவணை வெளியீடு.
உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கான தகுதி தேர்வான யுஜிசி நெட் தேர்வின் முழு அட்டவணையைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான தகுதித் தேர்வாக யுஜிசி நெட் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் நெட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இரண்டாவது தேர்வு டிசம்பர் மாதம் நடக்கிறது. அதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.
அந்த அறிவிப்பின்படி டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி 22 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. எந்த நகரத்தில் தங்களுக்கான தேர்வு மையம் என்கிற தகவலை மாணவர்கள், தேர்வுக்கு 10 நாள்களுக்கு முன்பு இணையத்தளத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வு நாட்களிலும் இரண்டு வேளைகளில் இந்தத் தேர்வு நடைபெறவிருக்கிறது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் https://www.nta.ac.in/ என்ற இணையத்தளத்தில் விரிவான தேர்வு அட்டவணையைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
Comments
Post a Comment