NEET எக்ஸாம் தப்புன்னா. TET எக்ஸாம்மும் தப்பு தான். தமிழக அரசை அட்டாக் செஞ்ச கிருஷ்ணசாமி.!!
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இன்றைய அரசு கடந்த ஏழு, எட்டு வருடங்களாக….
2017ஆம் ஆண்டு நீட் தேர்வு கொண்டு வந்த காலத்தில் இருந்து…. நீட் தேர்வுக்கு எதிராக அதாவது ஏற்கனவே மாணவர்கள் வந்து பிளஸ் டூ எழுதி விட்டார்கள். எனவே அவர்களுக்கு இன்னொரு போட்டி தேர்வுகள் தேவை இல்லை… நேரடியாக பிளஸ்-2 னுடைய அடிப்படையிலே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று…. அவர்களுடைய பணியில அதற்குரிய காரணங்களை சொல்லி போராடுகின்றார்கள்.
அதேபோல தமிழ்நாட்டில் வந்து நெட் தேர்வு எழுதி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் டிகிரி எம். ஏ படிக்கிறார்கள், பி .எட் படிக்கிறார்கள் பிறகு நெட் தேர்வு, ஸ்லெட் தேர்வு எழுதுகிறார்கள். அப்படியே என்று சொன்னால்…. இதே ஃபார்முலாவை அவர்களுக்கும் புகுத்தினால் அவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வுகள் எதற்கு என்பதுதான் என்னுடைய கேள்வி.
அப்போ எம்.பி.பி.எஸ் க்கு நீட் தேர்வு நடத்தினால் தப்பு. அது வடிகட்டக் கூடியது. அதே சமயத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வுக்கு மேல் தேர்வு எழுதுவது அது சரியானதா ? எனவே போட்டி தேர்வு என்பது அவசியம். நீங்க சீனியாரிட்டிபடி அல்லது மார்க் அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டுமே தவிர, மீண்டும் மீண்டும் அவர்களை கசக்கிப் பிழிவது, எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல என்பது எங்களின் கருத்து என தெரிவித்தார்.
Comments
Post a Comment