அதிகநாள் லீவ் எடுத்தால் பொதுதேர்வு எழுத முடியாது - பள்ளிக்கல்வித்துறை



+2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல் தயாரிப்பது குறித்து அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


கல்கடந்தாண்டு EMIS இணையதளத்தில் இருந்து மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்று தேர்வு எழுது அனுமதி வழங்கியதால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியது.


இதனால் 2023-24ஆம் கல்வியாண்டில் +2 வகுப்பு பொதுத் தேர்விற்கான பெயர் பட்டியலில் வருகைப்பதிவேடு கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிப் பண்டிகை முடிந்தப் பின்னர் வெளியிடப்படும் என துறையின் இயக்குனர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர், அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


அதில், 2023 மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11 ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே, 2023- 24ஆம் கல்வியாண்டில் +2 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 


எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் நவம்பர் 3ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password பயன்படுத்தி, +2 வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்த தேதி, பாடத் தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்.


மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் நீண்ட காலம் விடுப்பில் உள்ள மாணவர் பெயரை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் வேளையில், பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கப்படாத, நீண்ட காலம் விடுப்பில் உள்ள மாணவரின் பெயரை தேர்வு பட்டியலில் இருந்து கட்டாயம் நீக்க வேண்டும் எனில் உதவித்தேர்வு இயக்குநரிடம் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog