NET Exam: 2024-ம் ஆண்டு நீட் தேர்வு தேதி அறிவிப்பு - முழு விபரம்!
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் அடுத்த கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக இன்று (செப்.19) அறிவித்துள்ளது. அதன்படி, ஜேஇஇ (JEE Main) முதல் தேர்வு 24 ஜனவரி 2024 முதல் 1 பிப்ரவரி 2024 வரையும், ஜேஇஇ இரண்டாம் தேர்வு 1 ஏப்ரல் 2024 முதல் 15 ஏப்ரல் 2024 வரையும் நடைபெற உள்ளது.
மேலும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) மே 5, 2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், க்யூட் (CUET)இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15, 2024 முதல் மே 31, 2024 வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11, 2024 முதல் மார்ச் 28, 2024 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. யுஜிசி (NET) நெட் முதல் தேர்வுகள் ஜூன் 10, 2024 முதல் ஜூன் 21,2024 வரையும் நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வை பொறுத்தவரை, தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். வாட்ச், செல்போன், புளு டூத், ஹெட்போன், கேமரா, கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
மாணவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு சென்று தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டுபாடும் உள்ளது.
Comments
Post a Comment