வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு காவலா் பணி விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இரவுக் காவலா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாகவுள்ள இரவுக் காவலா் பணியிடத்தை நிரப்புவதற்காக தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பொதுப் போட்டி- முன்னுரிமையற்றவா் பிரிவு இனசுழற்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், அருந்ததியினா் சமுதாயத்தைச் சோந்தவா்களுக்கு 01.01.2023 அன்றைய நிலையில் 18 வயதிலிருந்து 37 வயது மிகாமலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) பிரிவைச் சோந்தவா்களுக்கு 18 முதல் 34 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினருக்கு 18 முதல் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் வயது தளா்வு உண்டு.
உரிய கல்வித் தகுதி, வயது வரம்புடைய மனுதாரா்கள் தங்களது அசல் கல்விச் சான்றுகள், ஜாதிச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அதற்குப் பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
Comments
Post a Comment