குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?
குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் வெளியாகவில்லை.
இதனால் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது அல்லது வெளியாகாமல் கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதே சமயத்தில் இந்த ஆண்டு குரூப்- 4 தேர்வுக்கு அழைப்பு வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டுதான் அறிவிப்பு வெளியாகும் என்றும் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர்.
லட்சக்கணக்கான தேர்வர்கள் குரூப்- தேர்வை தான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தேர்வர்களின் கனவு நிலைக்குமா அல்லது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கலைத்துவிடுமா என்பது குறித்து நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குரூப்- 4 தேர்வு கடைசியாக சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவு, இந்த ஆண்டு மார்ச் மாதம், அதாவது எட்டு மாதங்கள் கழித்து தான் வெளியானது. இந்த தேர்வுக்கான கவுன்சிலிங் தற்போது தான் நடந்து முடிந்துள்ளது. தற்போது, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
குரூப்- 4 தேர்வுகளில் ஓராண்டுக்கு மேலாக இழுத்தடிப்பது தேர்வர்களுக்கு மனவேதனை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment