10 லட்சம் காலியிடங்கள்!
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் குறித்த தகவல்கள் &'நேஷனல் கரியர் சர்வீஸ்' இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ளன என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்தில், நேரடி காலியிடங்களின் எண்ணிக்கை 5.6 லட்சமாகவும், ஜூன் மாதத்தில் 7.6 லட்சமாகவும் இருந்த நிலையில், தற்போது 10 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
காலியிடங்களில், மூன்றில் ஒரு பங்கு இடங்களில் அனுபவம் இல்லாதவர்களை தேர்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இது பல இளம் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற உதவுகிறது.
தொழில்நுட்ப நிர்வாகிகள், விற்பனை பிரதிநிதிகள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், லாஜிஸ்ட்டிக்ஸ் பிரதிநிதிகள், சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ் மற்றும் பராமரிப்பு பொறியாளர் ஆகிய பணியிடங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment