டிஎன்பிஎஸ்சி தலைவர்! சைலேந்திர பாபு பெயர் பரிந்துரை.. மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு!




தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்க காரணங்கள் மற்றும் ஆளுநர் கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது.



அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழ்நாடு அரசு.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாவை நியமிக்க அரசு முடிவு செய்து, ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை மீண்டும் அனுப்பி வைத்தது அரசு. 


ஏற்கனவே, சைலேந்திரபாபு நியமனத்துக்காக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்என் ரவி சமீபத்தில் திருப்பி அனுப்பியிருந்தார்.


அதில், அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் நியமனத்துக்கான நடைமுறைகளை குறித்து விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர். 


இந்த நிலையில் விளக்கங்களுடன் தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog