விரைவில் 62,000 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம்.. இதுவே முதல் முறை.. அசத்தும் மத்திய பிரதேச மாநில அரசு.!!
மத்திய பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சிகளும் மக்களுக்காக வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள்.
அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 87 ஆயிரத்து 630 நிரந்திர ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக கடந்த வருடம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையையில் தெரிவிக்கப்பட்டது.
6 ஆயிரம் பள்ளிகளில் ஒரு நிரந்தர ஆசிரியர் கூட இல்லை என்றும் 21,000 பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் ஒருவர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் ஆசிரியர் நியமனம் குறித்து முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பாக 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளார். இதன் மூலமாக 62 ஆயிரம் ஆசிரியர்களை பணியமர்த்துவத்தில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment