மாதம்தோறும் தேர்வு பள்ளிக்கல்வி புது திட்டம்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளும், தினசரி தேர்வுகளும் நடத்தி, மாணவர்களை பொது தேர்வுகளுக்கு தயார்படுத்துகின்றன.
அதனால், தனியார் பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.இதன்படி, அரசு பள்ளி மாணவர்களையும் அதிக மதிப்பெண் பெற வைக்கும் வகையில், மாதம் தோறும் தேர்வு நடத்தி, அவர்களை தயார்படுத்துமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டிய தேர்வு மற்றும் பாடத்திட்ட விபரங்களையும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இதன் மூலம், அடுத்த ஆண்டு பொது தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு ஏற்படும் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
Comments
Post a Comment