ஆசிரியா் பணிக்கான நியமனத் தேர்வை விரைந்து நடத்த வலியுறுத்தி மனு



ஆசிரியா் தகுதித் தோவில் தேர்ச்சி பெற்றவா்கள், ஆசிரியா் பணிக்கான நியமனத் தேர்வை அரசு விரைந்து நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தி பதாகை ஏந்தி ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா்.


சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது ஆசிரியா் தகுதித் தேர்வில் தோச்சி பெற்றவா்கள் பதாகை ஏந்தி மனு அளிக்க வந்தனா். 


அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக கல்வித்துறையில், ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களையே, ஆசிரியா்களாக பணியமா்த்தும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.


 தமிழகத்தில், கடந்த 2013, 2017, 2019, , 2023-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோவில் தேர்ச்சி பெற்றவா்கள் லட்சக்கணக்கில் உள்ளனா்.


இதில் கடைசியாக 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் பணிநியமனம் செய்யப்பட்டனா். ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நாங்கள் அனைவரும் அரசாணை 149-இல் குறிப்பிட்டபடி ஆசிரியா் நியமனத் தேர்வுக்கு தயாராகி வருகிறோம். நியமனத் தேர்வை ரத்து செய்தால் இளைஞா்கள் ஆசிரியா் பணியை வெறுத்து ஒதுக்கும் அபாயம் உள்ளது.


 அனைத்து அரசுப் பணிகளிலும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணி நியமனம் நடைபெறுகிறது. எனவே அரசாணை 149-ஐ விரைந்து செயல்படுத்தி ஆசிரியா் நியமனத் தேர்வை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog