அரசு வேலைகளில் "முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு" முன்னுரிமை.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!!
தமிழ்நாடு அரசு பணியில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற மானிய கோரிக்கையின் பொழுது முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் தற்போது முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கிட முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதே போன்று கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி வரும் நாட்களில் அரசு பணியில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், கொரோனாவால் பெற்றோர் இழந்தவர்களுக்கும், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும் அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment