11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!! 



தமிழகம் முழுவதிலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்த பொதுத்தேர்வை 7.73 லட்சம் பேர் எழுதினர்.


வெளியான தேர்வு முடிவுகளின் படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பொதுத்தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவிகளில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 3,91,968 மாணவர்கள், 3,14,444 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழகத்தில் மொத்தமாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


வெளியான தேர்வு முடிவுகளின் விடைத்தாள் நகல்பெற, தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 1, 2 ம் தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog