1066 சுகாதார ஆய்வாளர் (Health Inspectors) பணி வாய்ப்பு



தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் சுகாதார ஆய்வாளர் (கிரேடு 2) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


வேலைவாய்ப்பு குறித்து அறிவித்துள்ள நிறுவனத்தின் பெயர் : MRB தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்


பதவியின் பெயர் : சுகாதார ஆய்வாளர்கள் கிரேட் 2 (Health Inspector Grade 2)


வகை : மாநில அரசு வேலை (தற்காலிகம்)


காலியிடங்களின் எண்ணிக்கை  : 1066 (ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)


வேலை இடம் : தமிழ்நாடு


அறிவிப்பு தேதி : 11 ஜூலை 2023


மொத்தம் 1066 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 31 ஜூலை 2023


அதிகாரப்பூர்வ இணையதளம் : mrb.tn.gov.in 


கல்வித்தகுதி 


இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் 12ம் வகுப்பில் Biology பிரிவில் அல்லது Botany அல்லது Zoology பிரிவில் பயின்றவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்தவர்களாக இருக்க வேண்டும். மற்றும் மல்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் / ஹெல்த் இன்ஸ்பெக்டர் / சானிட்டரி  இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏதோ ஒரு பாடத்தை பயின்று, டைரக்டர் ஆப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரிவென்டிவ் மெடிசின் ஆணையத்திடம் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு 


18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் SC, ST, SCA, MBC / DNC உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் உட்சபட்ச வயது வரம்பு இல்லை. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் அப்ளை செய்யலாம். அதே போல் OC வகுப்பை சேர்ந்தவர்களில் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OC பிரிவில் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள் 42 வயது வரையும், Ex-Service manகள் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.


சம்பளம் 


MRB வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாத சம்பளம் 19,500 முதல் 62,000 ரூபாய் வரை வழங்கப்படும். 


கூடுதல் தகவல் மற்றும்

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://mrbonline.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog