NEET UG Results 2023: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்; தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரம்!
இளங்கலை மருத்துவப் படிப்புகள் சேர 2023-ம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், ஆயுஷ் படிப்புகளுக்கு (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி) நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியத் தேர்வுகள் முகமை மீண்டும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் மீண்டும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பித்தனர்.
நீட் தேர்வு முடிவுகள்
https://neet.nta.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
Comments
Post a Comment