NEET 2023 Cut Off: நீட் தேர்வு கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்?




நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும் இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும்?



பொறியியல் கட் ஆஃபில் மாற்றங்கள் இருக்குமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.


நாடு முழுவதும் மே 7 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வருண் ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். டாப் தரவரிசையில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


இந்தநிலையில், நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாடு மாணவர்களின் ஒட்டுமொத்த தகுதி சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 78,293 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 54.45. அதேநேரம் 2022 இல் 99,610 மாணவர்கள் எழுதி, 57,213 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 57.43. எனவே தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.


இந்திய அளவில் 720க்கு 700 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 94 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 250 பேருக்கு மேல் உள்ளனர். 675- 680 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 1000 பேருக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு 2100 பேருக்கு மேல் உள்ளனர். 630- 635 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 9000 பேருக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு 11000 பேருக்கு மேல் உள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 21000 பேருக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு 28000 பேருக்கு மேல் உள்ளனர்.


590 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 23000 பேருக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு 33000 பேருக்கு மேல் உள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 46000 பேருக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு 62000 பேருக்கு மேல் உள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 80000 பேருக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு 1,05,000 பேருக்கு மேல் உள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு மேல் கடந்த ஆண்டு 1,85,000 பேருக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு 2,40,000 பேருக்கு மேல் உள்ளனர்.


எனவே இந்த தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆஃப் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 590க்கு மேல் இருக்கலாம், இது கடந்த ஆண்டு 581 ஆக இருந்தது. பி.சி மாணவர்களுக்கு 536-540 க்கு மேல் இருக்கலாம், இது கடந்த ஆண்டு 528- 530 ஆக இருந்தது. பி.சி முஸ்லீம் மாணவர்களுக்கு 512-515 க்கு மேல் இருக்கலாம், இது கடந்த ஆண்டு 504 ஆக இருந்தது. எம்.பி.சி மாணவர்களுக்கு 505-508 க்கு மேல் இருக்கலாம், இது கடந்த ஆண்டு 596 ஆக இருந்தது. எஸ்.சி மாணவர்களுக்கு 415-420 க்கு மேல் இருக்கலாம், இது கடந்த ஆண்டு 407 ஆக இருந்தது.


நீட் கட் ஆஃப் சற்று உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், இது பொறியியல் சேர்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நிறைய மாணவர்கள் பார்டரில் உள்ளதால், அவர்கள் மாற்று வாய்ப்பாக பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog