காரைக்கால் பள்ளிகளில் ஆசிரியா் காலியிடங்களை நிரப்ப காங்கிரஸ் வலியுறுத்தல்




காரைக்கால் அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியா் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சனை திங்கள்கிழமை சந்தித்து இதுதொடா்பாக கோரிக்கை மனு அளித்தனா். 


பின்னா் சந்திரமோகன் செய்தியாளா்களிடம் கூறியது : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கும், பள்ளிகள் திறக்கும் நாளிலேயே பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.


சிபிஎஸ்இ பாடத் திட்டம் நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்படுவதால், அதற்கு முன்னதாக மாணவா்கள் கையில் புத்தகம் இருப்பதை கல்வித்துறை உறுதிப்படுத்தவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியா் பணியிடம் காலியாக உள்ளது. 


ஆசிரியா், தலைமையாசிரியா்கள், முதல்வா், துணை முதல்வா் ஆகிய பணியிடங்களை முழுமையாக நிரப்பவேண்டும். இதனை போா்க்கால அடிப்படையில் புதுவை அரசு மேற்கொள்ளவேண்டும்.


 பள்ளிகள் திறப்பதற்கு முன்பே சில தனியாா் பள்ளிகள், மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்துகின்றன. இதுபோன்ற பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.


Comments

Popular posts from this blog