கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி காலியிடங்கள்.. என்ன தகுதி? சம்பளம் எவ்வளவு? விவரம் இதோ




மத்திய அரசு பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் மொத்தம் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 14 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆங்கிலம், ஹிந்தி ஆகியவை இந்த பள்ளிகளில் பயிற்று மொழியாக உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


சிபிஎஸ்.இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டுகிறது. இந்த நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம் :


ஹிந்தி ஆசிரியர் - Primary Teacher (Hindi)


சமஸ்கிருதம் ஆசிரியர் - Trained Graduate Teacher (Sanskrit)


உயிரியல் ஆசிரியர் - Post Graduate Teacher (Biology)


பொருளியல் ஆசிரியர் - Post Graduate Teacher (Economics)


கல்வித்தகுதி :


பி.எட் படிப்பு முடித்திருக்க வேண்டும்

ஹிந்தி ஆசிரியர் பணிக்கு, ஹிந்தி படித்திருக்க வேண்டும்

சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கு 3 ஆண்டு கால பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

உயிரியல் ஆசிரியர் பணியிடத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

பொருளியல் ஆசிரியர் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

சம்பள விவரம் :


ஹிந்தி ஆசிரியர் - Primary Teacher (Hindi) - ரூ.21,250


சமஸ்கிருதம் ஆசிரியர் - Trained Graduate Teacher (Sanskrit) ரூ.26,250


உயிரியல் ஆசிரியர் - Post Graduate Teacher (Biology) ரூ.27,000


பொருளியல் ஆசிரியர் - Post Graduate Teacher (Economics) ரூ.27,500


ஆர்வமுள்ளவர்கள் மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். வரும் 24-ம் தேதி (24.06.2023) இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

Comments

Popular posts from this blog