நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!!
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உட்பட எந்த வகையான மருத்துவ படிப்புகளை படிக்கவும் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
மருத்துவபடிப்புக்களுக்கான நுழைவு தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு 499 நகரங்களில் மே 7ம் தேதி நடத்தப்பட்டது.
20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முறைகேடுகள் நடைபெறாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுவதும் பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் எப்போது முடிவுகள் வெளியாகும் என கேள்வி எழுந்து வருகிறது.
2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரிரு நாட்களில் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுகள் வெளியான பிறகு உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறைகள் இருப்பின், தேர்வர்கள் தேசிய தேர்வு முகமைக்கு தெரியப்படுத்தலாம்.
இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். விடைத்தாள்களில் பாட வல்லுநர்களை கொண்டு குறைகள் சரிபார்க்கப்படும். குறை கண்டறியப்பட்டால், தொடர்புடைய விடைகள் மாற்றம் செய்யப்பட்டு முடிவுகள் மாற்றி அறிவிக்கப்படும். நீட் தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment