அரசாணை 149ஐ நீக்கி விட்டு தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டுகளாக ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.
2018ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறையின் 149ம் எண் அரசாணையை ரத்து செய்து ஆணையிட்டாலே போதுமானது.
இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசாணை 149ஐ நீக்கி விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
அத்துடன், ஏற்கனவே இருந்தவாறு ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 57ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment