TNTET நியமன தேர்வு ரத்தா?? பள்ளிக்கல்வித்துறை எடுக்க போகும் முடிவு என்ன?
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் தகுதியானவர்களை, பணியமைத்துவதற்காக TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில் தான், அரசுப் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க, TNTET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் தகுதியானவர்களை, பணியமைத்துவதற்காக TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில் தான்,
அரசுப் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க, TNTET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
முதலில் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் பணி என்று இருந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு மாறியது. அதாவது, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பணி நியமனத்திற்காக மேலும் தேர்வு ஒன்றை எழுத வேண்டும் என்று தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நியமன தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றனர்.
இது குறித்து சமீபத்தில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மேலிடத்தில் கலந்து பேசி விட்டு சொல்கிறோம் என கூறியிருந்தார். ஆனால், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாக வில்லை.
கொரோனா தொற்றுக்கு முன்னாடி நடைபெற்ற TET தேர்வில் தேர்ச்சி பெற்றோர் உட்பட, பலர் இந்த நியமன தேர்வு ரத்து செய்ய வேண்டி, எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நியமன தேர்வு ரத்தாகுமா? என்பதே இனி பொறுத்திருந்து பார்ப்போம்
Comments
Post a Comment