TN Results 2023 : இன்று ரிசல்ட்! 10, 11ம் வகுப்பு மாணவர்களே! தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் லிங்குகள் உள்ளே!
மாநிலம் முழுவதும் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 மதிப்பெண், ஒரு 2 மதிப்பெண் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், பின்னர் 19ம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மே 19ம் தேதி இன்றே 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகின்றன.
வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த தேர்வு முடிவுகளை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவார். ஆனால், இன்று வெளியாகும் தேர்வு முடிவுகள் இயக்குனரகத்திலேயே வெளியிடப்படுவதால், செய்தியாளர்கள் சந்திப்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவையான விவரங்கள் மற்றும் பகுப்பாய்வை https://dge.tn.nic.in என்ற முகவரியில் அந்தந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் வேளையில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பிற்பகல் 2 மணிக்கும், www.tnresults.nic.in , www.dge.tn.gov.in என்ற முகவரிகளிலும் தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழி படிவங்களில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்குக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Comments
Post a Comment