டெட் தேர்ச்சி சான்றிதழை இ-சேவை மையங்களில் பெறலாம்




ஆசிரியா் தகுதித் தேர்வில்(டெட்) தேர்ச்சி பெற்றவா்கள் தங்களுக்கான சான்றிதழை இ-சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியா் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இது குறித்து அந்த வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2012, 2013, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 ஆகியவற்றை எழுதி தேர்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழின் மறு பிரதி ஆசிரியா் தேர்வு வாரியம் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 


இனிமேல், இந்த சான்றிதழை இ-சேவை மையங்களில் பெறும் வசதி மே 15 முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மறுபிரதி சான்றிதழைக் கோரும் விண்ணப்பங்களை ஆசிரியா் தேர்வு வாரியத்துக்கு இனிமேல் அனுப்ப வேண்டாம். 


விண்ணப்பதாரா்களிடம் மறு பிரதி சான்றிதழுக்கான கட்டணத் தொகை ரூ.100; இ-சேவை நிறுவனத்துக்கான சேவை கட்டணத் தொகை ரூ.60 என மொத்தம் ரூ. 160-ஐ செலுத்தி மறுபிரதி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இது குறித்த கூடுதல் விவரங்களை சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரா்களுக்கு வழங்க அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog