தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கு 80,000 பேர் விண்ணப்பம்!!



இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பதிவு துவங்கிய 10 நாளில் 80,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.


மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில், ஆரம்ப நிலை வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் ஏழை, எளிய குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலலாம். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது.


இந்நிலையில், இதில் 10 நாட்களுக்குள்ளாக 80,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 18ஆம் தேதி வரை பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog