பகுதி நேர ஆசிரியர்கள் நாளை டிபிஐ-ல் போராட்டம்! கண்டுகொள்ளுமா விடியா அரசு?




நாளை 22.05.2023லிருந்து பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் பணியினை நிரந்தரமாக்கக் கோரி இந்த உண்ணா விரத போராட்டத்தினை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நிகழ்த்த உள்ளனர்.


திமுக தனது வாக்குறுதியில் சொல்லிய 181 வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டி தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த மாதங்களில் பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 


சமீபத்தில் கூட டெட் தேர்வானவர்களுக்கு அரசுப்பணி இன்னும் சரியாக வழங்கப்படவில்லை என்று டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் போராடி தற்காலிகமாக போராட்டத்தினை தள்ளிவைத்திருந்தனர்.


இந்த விசயம் ஓய்வதற்குள் நாளை பத்தாயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் போராட உள்ளார்கள் என்று வந்திருக்கும் செய்தி திமுக அரசின் கையாலாகாதத் தனத்தினையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பின்னடைவான பணியையும் காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தப் போராட்டம் காலவரையின்றி வேறு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

Comments

Popular posts from this blog