பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு கடும் போட்டி
மாநில அளவில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில், இதுவரை, 1,73,895 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்கு, மாணவர்கள் முன்னுரிமை கொடுத்து விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில், 164 கலை அறிவியல் கல்லுாரிகள், ஏழு கல்வியியல் கல்லுாரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் முறையில், கடந்த 8ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. நாளை, 19ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை வழங்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த கல்வியாண்டில், அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2,98,400 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். நடப்பாண்டுக்கான விண்ணப்ப பதிவுகளின்படி இதுவரை, 1,73,895 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.பி.காம்., பி.காம்., சி.ஏ., மற்றும் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய மூன்று பாடங்களுக்கு, அதிக முன்னுரிமை அளித்து விண்ணப்பித்துள்ளனர். தனியார் கல்லுாரிகளை பொறுத்தவரையிலும், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 இளநிலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள், கடந்த 8ம் தேதி முதல் பெறப்படுகின்றன. ஜூன் 9ம் தேதி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். நேற்று முன்தினம் மாலை வரை, 8,251 மாணவர்கள் வேளாண் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
Comments
Post a Comment