12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் - அரசு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தல்!
தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் கணினி , தையல், இசை, தோட்டக்கலை கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகியவற்றில் தற்காலிக நிலையில் 12000 பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் பத்தாயிரம் தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம்.
12 ஆண்டாக பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்களின் எதிர்காலம் மேம்பட மனிதாபிமானத்துடன் தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181 -ஐ நிறைவேற்ற வேண்டி வருகிறோம். மே மாதம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடைத்திட தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment