10th Result 2023 Villupuram: விழுப்புரம் மாவட்டம் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன தெரியுமா ?



விழுப்புரம் மாவட்டம் 90.57 சதவீதம் தேர்ச்சி ஆகும். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 12,451 மாணவர்கள், 12,232 மாணவிகள் என 24,683 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 10,886 மாணவர்கள், 11,470 மாணவிகள் என மொத்தம் 22,365 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.43 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.77 ஆகும். விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.57% ஆகும். 


அரசு பள்ளிகளை பொறுத்தவரை 230 பள்ளிகளைச் சேர்ந்த 7,871 மாணவர்கள், 8526 மாணவிகள் தேர்வு எழுதி நிலையில், மாணவர்கள் 6619 பேரும், மாணவிகள் 7874 பேரும் மொத்தம் 14,493 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.39 ஆக உள்ளது.

Comments

Popular posts from this blog