மின்சாரவாரிய வேலைகளுக்கு இனி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும்!? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10,000த்திற்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள், ஜூனியர் அசிஸ்டன்ட், கள உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன.
இந்நிலையில் முதல் முறையாக இந்த காலிப்பணியிடங்களை தேர்வு மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
மின்சாரத்துறைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு..
அதன்படி, மின்சாரத் துறையில் காலியாக உள்ள 10260 இடங்களில் முதற்கட்டமாக 200 டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் வழி, மின்சாரத்துறை பணிகளுக்கு முயற்சித்து கொண்டிருப்போர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பித்து பின்னர் முறையான தேர்வு, நேர்காணல் ஆகிய முறைகள் மூலமாகவே பணிக்கு தேர்வாக முடியும். தேர்வு குறித்த விரிவான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். விவரங்கள் குறித்த அப்டேட்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை கவனிக்கவும்.
Comments
Post a Comment