தமிழ்நாட்டில் 10 நாளில் இன்ஜினியரிங் படிக்க 1 லட்சம் பேர் விண்ணப்பம்: அதிகாரிகள் தகவல்



இன்ஜினியரிங் படிக்க இதுவரை 1,05,641 பேர் விண்ணப்பித்துள்ளனர்' என்று மாணவர் சேர்க்கை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5ம் தேதி தொடங்கியது.


 இதையடுத்து மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


கடந்த 8 நாளில் 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் 9வது நாளான நேற்று முன்தினம், 1 லட்சத்தை எட்டியிருந்தது. அதன்படி, 1,00,066 பேர் பதிவு செய்திருந்தனர்.


அதனைத்தொடர்ந்து நேற்று மாலை நிலவரப்படி விண்ணப்ப பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1,05,641 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 58 ஆயிரத்து 185 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். 24 ஆயிரத்து 652 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.


 பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக பொறியியல் சேர்க்கைக் குழுவினர் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog