தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / வரும் 26.05.2023 (வெள்ளிக்கிழமை) முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மறுகூட்டல் விண்ணப்பம்
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரும் மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும், 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம். அதே போல், மறுகூட்டல் கோரும் பத்தாம் வகுப்பு பள்ளிமாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும் 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுத்தேர்வு!
தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய -பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணைத்தேர்வு 27.06.2023 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) வாயிலாகவும் 23.05.2023 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 1200 மணி முதல் 27.05.2023 (சனிக் கிழமை) மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
இந்நாட்களில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 30.05.2023 (செவ்வாய்க் கிழமை) மற்றும் 31.05.2023 (புதன் கிழமை) ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.500/-
மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை
தேர்வு தேதி
மொழிப்பாடம் 27.6.2023
ஆங்கிலம் 28.6.2023
கணிதம் 30.6.2023
தேர்வு மொழி 01.7.2023
அறிவியல் 03.7.2023
சமூக அறிவியல் 04.7.2023
Comments
Post a Comment