TNPSC Group 4 Results: உங்களுக்கு போஸ்டிங் வாய்ப்பு எப்படி? இன்னும் 3 ப்ராசஸ் இருக்கு!



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக என்னென்ன செயல்முறைகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தநிலையில், அடுத்தக்கட்டமாக என்னென்ன செயல்முறைகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம். தற்போது குரூப் 4 ரிசல்ட் ஒவ்வொரு தேர்வரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த தரவரிசையானது ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் சாதி அடிப்படையிலான தரவரிசை என இரண்டு பிரிவாக வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு அடுத்தப்படியாக ஒரு பணியிடத்திற்கு 2 அல்லது 3 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் (CV List) தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் வழியாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.


அதன்பிறகு, காலியிடங்களுக்கு ஏற்ப முதற்கட்ட கலந்தாய்வுக்கான பட்டியல் வெளியிடப்படும். பின்னர் காலியிடங்களுக்கு ஏற்ப அடுத்ததடுத்த கலந்தாய்வு நடத்தப்படும். இப்படியாக குரூப் 4 தேர்வில் வேலை வாங்குவதற்கு முன் 3 செயல்முறைகள் உள்ளன.


அடுத்தாக எந்த ரேங்கில் இருந்தால் வேலை கிடைக்கும் என்பதை பார்ப்போம்.


தற்போதைய பதவி வாரியான காலியிட விவரம்


கிராம நிர்வாக அலுவலர் – 425


இளநிலை உதவியாளர் – 5052


தட்டச்சர் – 3314


சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186


வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 140


எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு


பொதுப் பிரிவு (General)


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1722


தட்டச்சர் – 1021


சுருக்கெழுத்து தட்டச்சர் – 346


பிற்படுத்தப்பட்டோர் (BC)


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1487


தட்டச்சர் – 876


சுருக்கெழுத்து தட்டச்சர் – 269


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1133


தட்டச்சர் – 670


சுருக்கெழுத்து தட்டச்சர் – 220


தாழ்த்தப்பட்டோர் (SC)


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 842


தட்டச்சர் – 504


சுருக்கெழுத்து தட்டச்சர் – 170


அருந்ததியர் (SCA)


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 179


தட்டச்சர் – 108


சுருக்கெழுத்து தட்டச்சர் – 36


பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 193


தட்டச்சர் – 113


சுருக்கெழுத்து தட்டச்சர் – 110


பழங்குடியினர் (ST)


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 61


தட்டச்சர் – 22


சுருக்கெழுத்து தட்டச்சர் – 35


மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 200 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 50-60 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.


*****


TNPSC Group 4 Results Rank Analysis: எந்த ரேங்க் வரை ஜூனியர் அசிஸ்டன்ட் வேலை? 


உத்தேச பட்டியல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு ரிசல்ட்; எந்த ரேங்க் வரை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை கிடைக்கும்; முழு விளக்கம் இங்கே


எந்த ரேங்கில் இருந்தால் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். 


இங்கு ரேங்க் என்று குறிப்பிடுவது சாதி அடிப்படையிலான ரேங்க் ஆகும்.


எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு


இளநிலை உதவியாளர் – 5167


பொதுப் பிரிவு (General)


ஆண் – 1700


பெண் – 1800


ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1850


பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1900


பிற்படுத்தப்பட்டோர் (BC)


ஆண் – 2000


பெண் – 2100


ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 2150


பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 2200


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)


ஆண் – 1600


பெண் – 1700


ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1750


பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1800


தாழ்த்தப்பட்டோர் (SC)


ஆண் – 900


பெண் – 950


ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1000


பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 1050


அருந்ததியர் (SCA)


ஆண் – 180


பெண் – 185


ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 190


பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 200


பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)


ஆண் – 210


பெண் – 220


ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 230


பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 240


பழங்குடியினர் (ST)


ஆண் – 65


பெண் – 70


ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 75


பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) – 80


மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 50 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 10 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog