தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு தேதி அறிவிப்பு..
தமிழ்நாட்டில் அரசு, தனியார் கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு அடுத்த நாள், அதாவது மே 9ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 9-ல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 1ம் தேதியே தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 633 சுயநிதி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், மே 8-ம் தேதி பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியான பின் உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment