டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் திடீர் திருப்பம்.. பிடிஆர் எடுத்த அஸ்திரம்.. வருகிறது "ஏஐ".. முக்கிய தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த 2022 நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற்றது, தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர்.
இந்த தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 41 சதவிகிதம் பேர் தேர்வு எழுதவில்லை. வருகைப்பதிவு எண்ணிக்கை 59% என்ற நிலையில் இருந்தது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளுக்கு இந்த தேர்வு நடந்தது.
இந்த தேர்வுகள் நவம்பர் மாதம் நடத்த நிலையிலும் கூட இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு தாள்களை திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதிய காரணத்தால் இதை திருத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் எப்படியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் ஏற்கனவே தேர்வு முடிவுகளுக்கான பதில்கள் வெளியிடப்பட்டுவிட்டது. தேர்வர்கள் இந்த பதில்களை டவுன்லோட் செய்து, தாங்கள் எழுதிய பதில்கள் சரியா என்பதை சோதனை செய்து கொள்ள முடியும்.
அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் குரூப் 2, 2ஏ தேர்வு நடந்தது. 2019க்கு பின் இந்த தேர்தல் நடப்பதால் பலர் இந்த தேர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுக்க தற்போது காலியாக உள்ள 5,446 பதவிக்கு நடக்கும் தேர்வை 55 ஆயிரம் பேர் எழுதினர். கடும் போட்டி உள்ளதால் பல ஆண்டு படித்துவிட்டு இந்த தேர்வை எழுத தேர்வர்கள் வந்து இருந்தனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அதிக கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, AI Automation மூலம் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க தற்போது ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் ஒவ்வொரு சேவைகளிலும் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் கடந்த சில மாதங்களில் ஏஐ இன்னும் வேகமாக வளர தொடங்கிவிட்டது. உதாரணமாக உலகம் முழுக்க சாட் ஜிபிடி தற்போது பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் கொண்ட தேடுபொறி நிறுவனமான இது நாம் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும். அதோடு ஏற்கனவே அளிக்கப்படும் பதில்களை வைத்து.. அது தன்னை தானே மெருகேற்றிக்கொள்ளும்.
தற்போது அதேபோல் AI Automation மூலம் தேர்வு தாள்களை திருத்தும் பணிகளை மேற்கொள்ளுவோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment