தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு விதிகளை திருத்தி அரசு வேலை வழங்க நடவடிக்கை உள்ளிட்ட சலுகைகள் சட்ட மன்றத்தில் முதல்-அமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (17.4.2023) மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பதிலுரை வழங்கினார்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் சார்பில் கீதாஜீவன் வெளியிட்ட அந்த துறைகளுக்கான அறிவிப்புகள் வருமாறு:-
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, பயனா ளியின் பங்கு தொகையை செலுத்து வதற்காக வட்டியில்லா வங்கி கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆயிரம் பேர் பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
உயர்கல்வி பயிலும் ஆயிரம் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா ரூ.14 ஆயிரம் மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகளும் பயன் பெறும் வகையில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளிக ளுக்கு வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அய்ந்து சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். மொத்த அலகுகள் 20-க்கு குறைவாக இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு அலகு ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலமாக வழங்கப் பட்டு வரும் விபத்து, நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையை உயர்த்தி கூடுத லாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
செவி மாற்றுத்திறனாளிகள் பயன டையும் வகையில், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல் படுத்தப்படும். அரசு நடத்தும் கூட் டங்களில் செவி மாற்றுத்திறனாளிக ளுக்கும், மற்றவர்களுக்கும் இடை யேயான கருத்து பரிமாற்றத்தை எளிதாக்க இந்த திட்டம் உதவும். இதன்படி 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு நிதி உதவி பெறும் 92 ஆரம்பநிலை பயிற்சி மய்யங்கள் மற்றும் 56 மறுவாழ்வு இல்லங்கள், அறிவுசார் மாற்றுத் திறனாளிக்கான 70 பராமரிப்பு இல்லங்களில் பணிபுரியும் 1,011 பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியம் உயர்த்தி வழங் கப்படும். அதன்படி சமூக பணியா ளர்களுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும்; துணை செவிலியருக்கு ரூ.5,500இல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும்; தொழிற்பயிற்றுநர் மற்றும் விடுதி காப்பாளருக்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிர மாகவும்; இரவு காவலருக்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமா கவும்; உதவி சமையலருக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமா கவும்; துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிர மாகவும்; பராமரிப்பு உதவியாளர் களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப் படும்.
அரசு நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப் படும் 326 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தை களை பராமரிக்க எதுவாக மாதந் தோறும் ரூ.4,500 மதிப்பூதியத்தில் பராமரிப்பு உதவியாளர்களை நியமனம் செய்யயும் திட்டம் செயல் படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து தங்கி உள்ள 592 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில், உணவூட்டு மானியத்தை ரூ.42-லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப் படும்.
மனநலம் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களை மீண்டும் சமுதா யத்தில் ஒருங்கிணைப்பதற்காக மீண்டும் இல்லம் எனும் புதிய திட்டத்தை முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி, ஒரு மாவட்டத்திற்கு 2 இல்லங்கள் வீதம் 10 இல்லங்கள், 40 பேர் பயன் பெறும் வகையில் செயல்படுத் தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண் டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணி இடங்களை நிர்ணயம் செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு, பணி வாய்ப்புகள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப் பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்த துறைகளின் விதிகளுக்கு உட்பட்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளை தளர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை 2 மடங்காக உயர்த்தி 22 ஆயிரத்து 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மனநலம் சார் மற்றும் அறிவு சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 150 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டு 3 இல்லங்கள் கட்டப்படும்.
அரசு நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப் படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மய்யங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தை களுக்கு இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார். மேலும் கோட்ட அளவில் மாற்றுத் திறனா ளிகளுக்கு 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
Comments
Post a Comment