டிஎன்பிஎஸ்சியின் 54 துறைகளில் மதிப்பெண், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி!
டிஎன்பிஎஸ்சியின் நிர்வாகத்தில் உள்ள 54 துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றினை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களில் இதனை செய்து முடிக்கவேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது. 2003 மார்ச் மாதம் 10ம் தேதியிலிருந்து பதவியிலிருப்பவர்களின் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு ஆகியவற்றை சரிபார்த்து தரவுகள் எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பானது திமுகவின் அரசுப் பணியாளர்கள் தேர்வுகள் தொடர்பாக சமீபமாக நடந்தேறும் புகார்கள் முறைகேடுகளுக்கு தக்க பாடமாக அமைந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டிலும் டிஎன்பிஎஸ்சி பதவி உயர்வு குறித்தான பிரச்சினை நடைபெற்றது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் அதை செயல்படுத்தாமல் விடியா அரசு காலம் தாழ்த்தியது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப் பணியில் மதிப்பெண் மற்றும் மூப்பு முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என 2022 ஆம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி மறுபடியும் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து அந்த ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், "மதிப்பெண் – மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்ற உத்தரவுபடி அனைவருக்கும் மதிப்பெண்- மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சாத்தியமில்லை. ஆனால் மதிப்பெண் மூப்பு கோரி வழக்கு தொடர்ந்த 1996-ம் ஆண்டு பிரிவினருக்கு மட்டும் மதிப்பெண் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வை கடைபிடிக்கிறோம். அதேவேளையில், டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை 2021ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பதவி உயர்வு வழங்குகிறோம்” என தெரிவித்தது.
தற்போது இன்றைக்கு நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு பதவி உயர்வு விவகாரத்தில் மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசு விரைந்து இதனை செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
Comments
Post a Comment