அடுத்த அதிர்ச்சி | குரூப் 4 தேர்வில் ஒரே பகுதியில் 400 பேர் தேர்ச்சி! டிஎன்பிஎஸ்சி விளக்கம்!




தென்காசி மாவட்டத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த 400 பேர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



கடந்த 2022 -ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள், கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த காலதாமத்திற்கு அரசு பணிகளில் மகளிருக்கு வழங்கப்படும் தனி இட ஒதுக்கீடு உரிய முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தான் காரணம் என்று தேர்வாணையம் தெரிவித்தது.


வெளியான தேர்வு முடிவுகளில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேர்வு முடிவுகள் குறித்து இன்று மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.


 


தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியில் தேர்வு எழுதிய குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இருந்து மட்டும் அதிகப்படியான ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.


மொத்தம் 2000 ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியிடங்களில், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இருந்து மட்டும் 450 ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகள் தேர்வு ஆகி இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. அதில், குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் முறைகேடு என்ற முடிவுக்கு வருவது தவறு என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

Comments

Popular posts from this blog