தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வித் திட்டம்- 20-ம் தேதி ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் 20ம் தேதி துவங்குகிறது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி, அல்லது முதலாம் வகுப்பில் இருக்கக்கூடிய மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு வரும் 20ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 1.50 லட்சம் இடங்கள் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆன்லைன் வழியில் பதிவு செய்யும் வழிமுறை உள்ளிட்ட முழுமையான அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.
Comments
Post a Comment