10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் பெறுவது கடினம்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணித தேர்வில் எளிமையான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும் சில வினாக்கள் குழப்பம் ஏற்படுத்தியதால் சென்டம் பெறுவது கடினம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
தேனி மாவட்ட மாணவர்கள் கூறியதாவது: சென்டம் கடினம்மோனிகா, கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி, தேனி: ஒரு மதிபெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. 5 மதிப்பெண் வினாக்களில் 14 கொடுக்கப்பட்டு 10 வினாக்களுக்கு விடையளிக்கவும், 42வது கட்டாய வினாவும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. அந்த வினாவும் கணங்கள் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டதால் எளிமையாக விடையளித்தேன். ஆனால், 37 வது வினாவில் சமன்பாடு பார்முலா கண்டறிய குழப்பம் ஏற்பட்டது.
அல்ஜிப்ரா, இயற்கணிதம், எண்களும் தொன்மகோடுகளும், நிகழ்தகவு, முக்கோணவியல் உள்ளிட்ட படித்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவேன். குழப்பத்தை ஏற்படுத்திய வினா ஜி.ஸ்ரீநிதி, என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, கூடலூர்: கேள்வித்தாள் மிக எளிமையாக இருந்தது. 5 மதிப்பெண் வினாவில் கேள்வி எண் 37ல் இன்டர்செப்ட் (intercept) பாயிண்ட் இல்லை. அதனால் கணக்கு போட முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல் ஐந்து மதிப்பெண் வினாவில் கேள்வி எண் 30ல் 'செந்திலின் வீட்டிற்கு முன்னதாக உள்ள வீடுகளின் கதவிலக்கங்களின் கூட்டுத் தொகையானது செந்திலின் வீட்டிற்கு பின்னதாக உள்ள வீடுகளின் கதவிலக்கங்களின் கூட்டுத் தொகைக்கு சமம் எனில் செந்தில் வீட்டு கதவிலக்கத்தை காண்க', என்ற கேள்வி சற்று குளறுபடியை ஏற்படுத்தியது. ஒரு மதிப்பெண் வினாவில் நான்கு, இரண்டு மதிப்பெண் வினாவில் ஒன்று, ஐந்து மதிப்பெண் வினாவில் இரண்டு ஆகியவை சற்று யோசிக்க செய்து கிரியேட்டிவாக எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. ஒரு சில கேள்விகளைத் தவிர அனைத்தும் புத்தகத்தின் பின்பகுதியில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது. யோசித்து எழுதினால் சென்டம் எளிதாக வாங்க முடியும்.
நல்ல மதிப்பெண் பெறலாம்க.அம்பரிஷ், நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கம்பம்: கணித தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் 14 வினாக்களில் 12 எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இரண்டு வினாக்கள் மட்டும் புத்தகத்தில் இருந்து எதிர்பாராததை கேட்டிருந்தனர். இரண்டு மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் ஆகிய இரண்டும் ஆசிரியர்கள் கூறியபடியே கேட்கப்பட்டிருந்தது.
குறிப்பாக படம் வரைவது கிராப் மிக எளிதாக இருந்தது. கணித தேர்வு கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி தயார்படுத்தினர். பலமுறை படித்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தது.
சராசரி மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளது. நான் 95 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். சென்டம் பெறும் வாய்ப்பு குறைவுபெ.முருகவேல், நாடர் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: கடந்த இரு ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாத்தாளை ஒப்பிடுகையில் இந்தாண்டு வினாத்தாள் எளிதாக உள்ளது. படிப்பில் கவனம் குறைந்த மாணவர்களும் எளிதாக தேர்ச்சி பெறுவர்.
ஒருமதிப்பெண்ணில் 9 வது வினா, இரு மதிப்பெண்ணில் 28 வது வினா கிரியேட்டிவ் வினாக்களாக கேட்கப்பட்டிருந்தன. வடிவியல் வினாக்கள் எளிதாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களில் தொடர் பயிற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.
சாதரணமாக படிக்க கூடிய மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் வகையில் வினா இருந்தது. பாடப்பகுதியை நன்கு கவனித்து படித்திருந்த மாணவர்களுக்கு சதம் எளிதாக எடுக்கலாம். அதிக பேர் நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம். புத்தகத்தின் உள்ள பயிற்சி வினாக்கள், பாடப்பின் பகுதியில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
Comments
Post a Comment