குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு: முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்1 பதவிக்கான முதல்நிலை போட்டி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஆகிய பணிகளை உள்ளடக்கிய 2022-ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
அந்த தேர்வுக்கு 3.22 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கான, முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் 2022 நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. 1.9 லட்சம் பேர் மட்டுமே முதல்நிலைத் தேர்வினை எழுதினர்.
இந்தநிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சியடைந்தவர்களுக்கு குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முதன்மைத் தேர்வுக்கு தேர்வு பெற்றவர்கள் 200 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி உரிய ஸ்கேன் செய்து ஆவணங்களை மே மாதம் 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment