நீட் தேர்வுக்கு இன்று(06-03-2023) முதல் விண்ணப்பிக்கலாம்!!
இளநிலை நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்விற்கு விண்ணப்ப நடைமுறை நாளை முதல் தொடங்குகிறது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை/முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் மூலம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தி வருகிறது.
முன்னதாக, 2023ஆம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்ப நடைமுறை தொடங்கும என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்ப நடைமுறை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், நீட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை NTA இணையதளத்தில் neet.nta.nic.in அறிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment