10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு: 25,000 பேர் ஆப்சென்ட்.. அரசு வெளியிட்ட தகவல்..!!!!




தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது.


அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது.


அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியிருப்பதும், சென்னையில் மட்டும் 10-ம் வகுப்பு படிக்கும் 811 மாணவர்கள் படிப்பை கைவிட்டதும் தெரியவந்து உள்ளது.


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைத்து பொதுத்தேர்வை எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையானது உத்தரவு பிறப்பித்தது.


10-ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு தேதி மாணவர்கள் நலன் கருதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செய்முறைத் தேர்வில் 25,000 மாணவர்கள் பங்கேற்காததே இந்த அறிவிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. செய்முறைத் தேர்வில் இவ்வளவு மாணவர்கள் ஆப்சென்ட் என்றால், பொதுத்தேர்வில் நிறைய மாணவர்கள் ஆப்சென்ட் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது.

Comments

Popular posts from this blog