ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு



பிளஸ் டூ படித்த மாணவர்களின் உயர்கல்வியில், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT) உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. ஏறத்தாழ ஆண்டுக்கு 2 லட்சம் கோடி மத்திய அரசு இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்குகின்றது.


தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), பிற மத்திய் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த முதன்மைத்தேர்வு(முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது.


இந்த தேர்வுகளுக்கான முதன்மை அமர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வினை சுமார் 8,23,967 பேர் எழுதி இருந்தனர். தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட 14 மொழிகளில் நடைபெற்றது இதற்கான விடைத்தாள்கள் நேற்று வெளியிடப்பட்டன.


இதையடுத்து ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் பக்கத்தில் சென்று தெரிந்துகொள்ள முடியும்.


Comments

Popular posts from this blog