குரூப்-2 தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் தகுதி இழப்பு?





நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 பிரதான தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி இழப்பு செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக அரசு துறைகளில், 'குரூப் 2, 2 ஏ' பணிகளில் காலியாக உள்ள, 5,446 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியே கடந்த ஆண்டு மே, 21ல் முதல் நிலை தகுதி தேர்வு நடந்தது. 


இதில் தேர்ச்சி பெற்ற 55 ஆயிரம் பேருக்கு, குரூப் - 2 பிரதான தேர்வு நேற்று முன்தினம் (பிப்.,25) நடத்தப்பட்டது. அன்று காலையில் நடக்கவிருந்த தமிழ் தகுதித்தாள் தேர்வுக்கு, பல தேர்வு மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுக்கான விடைத்தாள்கள் வர தாமதமானது. இதனால், காலை, 9:30 மணிக்கு திட்டமிட்டபடி தேர்வை துவக்க முடியவில்லை.


தாமதமாக தேர்வை நடத்த துவங்கினாலும், பல இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் மற்றும் பதிவெண்ணுடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டன. அதனால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். பல தேர்வர்கள் தங்கள் பதிவெண்களை பார்க்காமல், மாறியிருந்த விடைத்தாளில் விடைகளை வேகமாக குறிப்பிட்டதால் அச்சம் அடைந்தனர்.


பின், தேர்வு மையங்களில் இருந்து, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தகவல் அளிக்கப்பட்டு, விடைத்தாள்களை சரியாக வழங்கவும், விடைத்தாள் மாறியோருக்கு, மாற்றாக வெற்று விடைத்தாள்கள் வழங்கியும், தேர்வு நடத்தப்பட்டது. 


மேலும் புத்தகங்கள் மற்றும் செல்போன்களை பார்த்து பட்டதாரிகள் குரூப் 2 தேர்வெழுதியதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து, டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி இழப்பு செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog