1083 காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 1083 காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய அறிபிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மார்ச் 4 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிவை வைரதொழில் அலுவலர் உள்ளிட்ட 1083 காலி பணியிடங்கைள நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுகளுக்கு இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் பணிமேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 794 காலியிடங்கள், தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் சார்நிலைப் பணியில் இளநிலை வரைதொழில் அலுவலர் 236 காலியிடங்கள், இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப்பணித் துறையில் 18 காலியிடங்கள், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் வரைவாளர் நிலை-3 நகர் ஊரமைப்புத் துறையில் 10 காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.35,400 - 1,30,400 சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன தொழில்நுட்ப சார்நிலைப் பணியில் முதலாள்.நிலை-2 தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறையில் 25 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு சம்பளம் மாதம் ரூ.19,500 - 71,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள், மெக்கானிக்கல் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும். மேலும், இந்த தேர்வுகளுக்காக மார்ச் 4 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கைடசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், இனிய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வைர வழங்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. எழுத்துத் தேர்வு 27.05.2023 ஆம் தேதி காலை, மதியம் என இரண்டு என நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment