அரசு பள்ளிகளில் 400 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!!




தமிழக அரசுப் பள்ளிகளில் 400க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.


இல்லம் தேடி கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வட்டார அளவில் ஓர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  ஒரு பகுதியாக கொரோனா காலகட்டத்தில் வீட்டிற்கே சென்று கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரே தெருவில் உள்ள பிள்ளைகளை ஒன்றிணைத்து மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகுப்புக்களை நடத்தி வந்தது. இத்திட்டத்தின் கீழ் தற்காலிக ஆசிரியர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.


 


இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 


பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் இந்த கல்வியாண்டு முடியும் வரை, அதாவது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம். இவர்களுக்கான பணி ஆணை ஜனவரி 9ம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


 


இவர்களை பணியில் அமர்த்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தற்காலிக ஆசிரியர் நியமனங்களை பொறுத்தவரை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தகுதியுடையவராக இருப்பின் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். 


பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000ம் மதிப்பூதியம் வழங்கப்படும்.


இல்லம் தேடி கல்வி பணிகளில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும், பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog